14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவில் சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த 21ஆம் திகதி துஸ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கும் குறித்த சிறுமிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பின்னதாகவே சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை இன்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக