ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவருக்கும் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்த கீதாராணி (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு
கீதாராணியை விஜயகுமார் அடித்து உதைத்து கொடுமைப் படுத்த தொடங்கியதாக தெரிகிறது. எனவே கீதாராணி அவ்வப்போது ரேணிகுண்டா சென்று தனது தந்தை முத்துகிருஷ்ணனிடம் பணம் வாங்கி வருவார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் வரதட்சணை கேட்டு கீதாராணியை விஜயகுமார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே, கீதாராணி கோபித்துக் கொண்டு ரேணி குண்டாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே கடந்த 24-ந்தேதி தனது மாமனார் வீட்டிற்கு சென்ற விஜயகுமார் சமரசம் பேசி தனது மனைவி கீதாராணியை பனப்பாக்கம் அழைத்து வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் விரைந்து வந்து ஓரகடம் போலீசில் புகார் செய்தார். அதில், விஜகுமார் வரதட் சணை கேட்டு தனது மகளை அடித்து கொலை செய்து உடலை மண்எண்ணை ஊற்றி எரித்ததாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினார்கள். திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக