புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் நாட்டில் நெல்லை அருகே பணத்திற்காக விற்கப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று திடீர் உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்தது.நெல்லை மாவட்டம் நடுவங்குறிச்சியைச் சேர்ந்த சுடலை மனைவி செல்வி. அண்மையில் அவரது கணவர் பிரிந்து சென்றதால் செல்வி
தற்போது சுத்தமல்லி வ.உ.சி. நகரில் வசித்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே 8 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இதனால் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என வருந்திய செல்வி அவைகளை விற்பது குறித்து அருகில் வசித்து வந்த பாத்திமாவிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி பாத்திமா மேலப்பாளையம் மற்றும் சம்பாவர் வடகரையைச் சேர்ந்த புரோக்கர்கள் மூலம் 2 குழந்தைகளையும் ரூ. 2 லட்சத்திற்கு விற்றார்.

ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் புரோக்கர்கள் ஏமாற்றிவிட்டனர். இந்த விவகாரம் பொலிசுக்கு தெரிய வரவே சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் விசாரணை நடத்தி விற்கப்பட்ட குழந்தைகளை மீட்டார்.

இது தொடர்பாக தாய் செல்வி, பாத்திமா மற்றும் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் நெல்லை சரணாலயத்தின் சார்பில் ஆலங்குளத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று ஒரு குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இது தொடர்பாக ஆலங்குளம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top