புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தீக்காயங்களானது பெரும்பாலும் வீட்டிலேயே ஏற்படுகிறது. அதுவும் வீட்டில் சமைக்கும் போது, வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றும் போது என்று தான் அதிகமாக ஏற்படுகிறது.இவற்றால் ஏற்படும் சிறு காயத்தால் உண்டாகும் எரிச்சலை தாங்கவே முடியாது. இதனால் உடனடியாக மருத்துவரிடம்
செல்ல வேண்டும் என்று நினைப்போம். ஆனால் வீட்டில் வேலையின் காரணமாக செல்லவும் முடியாது. அந்த நிலையில் வீட்டிலேயே நாம் சிறு முதலுதவி செய்து அந்த எரிச்சலைக் கட்டுப்படுத்தலாம்.

தீக்காயங்கள் பெரியதாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆனால் சிறு காயங்கள் என்றால் அதை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரிசெய்ய முடியும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!

காயத்தால் ஏற்பட்ட எரிச்சலை குறைக்க...

ஐஸ் : தீக்காயங்களால் ஏற்படும் எரிச்சலுக்கு ஐஸ் ஒரு சிறந்த மருந்தாகும். தீக்காயத்தால் எரிச்சல் ஏற்படும் போது, முதலில் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகளை எடுத்து 5-10 நிமிடம் வைக்க வேண்டும். ஏனெனில் அவை குளிர்ச்சியாக இருப்பதால், எரிச்சல் இருக்கும் இடத்தில் இருந்து வெப்பத்தை எடுத்துவிடும். மேலும் இவை அந்த இடத்தில் வலியை குறைப்பதோடு, புண் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளி : தக்காளியானது இயற்கையாகவே சருமத்திற்கு மிகவும் நல்ல பொருள். மேலும் இது தீக்காயங்களால் ஏற்பட்ட எரிச்சலையும் நீக்கும். தக்காளியை நறுக்கிக் கொண்டு, எரிச்சல் இருக்கும் இடத்தில் சாறு முழுவதும் வற்றும் வரை வைக்கவும். இதனால் எரிச்சலானது முற்றிலும் உடனடியாக நீங்கிவிடும்.

முட்டை : முட்டையின் வெள்ளைக் கருவை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து, காய வைக்க வேண்டும். இவ்வாறு பல முறை செய்தால் தீக்காயங்களால் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் புண் சரியாகும். இது காயங்களால் ஏற்பட்ட எரிச்சலுக்கு மிகவும் சிறந்தது.

மஞ்சள் : மஞ்சளானது அனைத்து வகையான காயங்களுக்கும் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். அத்தகைய மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து காய வைத்து, பின் கழுவ வேண்டும். மறுபடியும் அந்த பேஸ்டை அந்த இடத்தில் தடவ வேண்டும். பிறகு பாருங்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் எந்த ஒரு வலியும் இருக்காது.

கற்றாழை : கற்றாழை ஒரு அருமையான செடி. இது ஒரு சிறந்த வலி நிவாரணி என்றும் சொல்லலாம். தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள், வீட்டில் கற்றாழைச் செடி இருந்தால், அதன் தண்டை வெட்டி, அதில் இருக்கும் ஜெல் போன்ற திரவத்தை எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இதனால் வலி மட்டும் போவதோடு, காயம் ஏற்பட்ட இடத்தில் வடுவானது நிரந்தரமாக இருக்காமல், போய்விடும்.

டூத் பேஸ்ட் : இது ஒரு சிறந்த வலி குறைப்பான் என்று சொல்லலாம். காயம் ஏற்பட்ட இடத்தில் சிறிது டூத் பேஸ்டை தடவி, காய வைத்து கழுவ வேண்டும். வலி போகவில்லை என்றால், வேண்டுமெனில் அதனை தொடர்ந்து 2-3 முறை செய்யலாம். இப்போது இந்த முதலுதவி எப்படி வலியை குறைத்து நிம்மதியைத் தருகிறது என்று பாருங்கள்.

மேற்கூரிய வீட்டுப் பொருட்களையெல்லாம் காயம் ஏற்பட்ட இடத்தில் பயன்படுத்தினால் வலி மற்றும் எரிச்சல் குறைவதோடு, சருமத்திற்கும் மென்மையைத் தருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top