புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் இன்று மின்சாரம் தாக்கியதில் 9 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியை சேர்ந்த ஜீவேந்திரன் டிலக்ஸ்னி
என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டில் மின்சாரத்தில் இயங்கும் பேக்கரி உள்ளதாகவும் பேக்கரியில் மின் விநியோகம் செய்வதற்காக கீழே வைத்திருந்த மின் செருகியில் குழந்தை கையை வைத்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது.

உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

பெற்றோரின் கவனயீனமாக கீழே வைத்திருந்த மின்செருகியை தவன்றுசென்ற குழந்தை அதனை எடுத்து விளையாட முனைந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top