புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புதுடெல்லியில் கடன் தொல்லைக்கு பயந்து 6 மாதமாக சாப்பிடாமல் வீட்டை பூட்டிக் கொண்டு வசித்த அக்கா, தங்கை இருவரும் உடல் முழுவதும் புண்ணுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் ரோகிணி 8வது செக்டாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசித்தனர்.

அக்கா, தங்கையான மம்தா(40), நீரஜா(29). இவர்களோடு தாய் நிர்மலா(70), மம்தாவின் மகனும் இந்த குடியிருப்பில் தங்கியிருந்தனர்.

இவர்கள் அந்த குடியிருப்பில் உள்ள மற்றவர்களுடன் அவர்கள் பழகவே மாட்டார்கள். அவர்களது வீட்டு கதவு பெரும்பாலான நேரம் பூட்டியே கிடக்கும்.

கடந்த 6 மாதமாக மம்தாவையும், நீரஜாவையும் அந்த குடியிருப்புவாசிகள் யாருமே பார்க்கவில்லை. நிர்மலாவும், மம்தாவின் மகனும் மட்டும் எப்போதாவது வெளியே வருவார்கள்.

இந்நிலையில், அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் நிர்மலாவிடம் விசாரித்தனர்.

அவர்களுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறிய நிர்மலா டெல்லியின் வேறு பகுதியில் வசித்த தனது மகனை வரவழைத்தார். அவரிடம் குடியிருப்புவாசிகள் கேட்டபோது, வீட்டின் பூட்டிய அறைக்குள் கடந்த 6 மாதங்கள் மம்தா, நீராஜா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தொண்டு நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்தனர். அந்த அறையில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்தபோது, மம்தாவும், நீரஜாவும் கிழிந்த ஆடைகளுடன் உடல் முழுக்க சீழ் வடியும் புண்களோடு, எலும்பும் தோலுமாக கிடந்தனர்.

அவர்களை மீட்டு அம்பேத்கர் அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பல மாதங்களாக சாப்பிடாததால் மம்தா 15 கிலோ எடை மட்டுமே உள்ளார். இது பற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில் மம்தாவும், நீராஜராவும் பலரிடம் கடன் வாங்கியுள்ளனர்.

ஆனால் கடனை திருப்பித்தர முடியவில்லை. பணத்தை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதும் பயந்து போன அக்கா, தங்கை வெளியில் செல்வதை தவிர்த்துள்ளனர்.

வீட்டுக்கும் கடன்காரர்கள் வந்ததால் பயத்தில் 6 மாதத்துக்கு முன் வீட்டின் ஒரு அறைக்குள் சென்று அவர்கள் பூட்டிக்கொண்டனர். அவர்களை வெளியே வரச்சொல்லி தாயும், மம்தாவின் மகனும் கேட்டுக்கொண்டபோது வெளியே வரவில்லை.

இப்படியே 6 மாதம் ஆகிவிட்டது. உள்ளே, உணவு இல்லாமல் அக்காவும் தங்கையும் பட்டினி கிடந்துள்ளது தெரியவந்தது.

இதுபற்றி பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடன் தொல்லை காரணமாக வீட்டுக்குள் 2 பேரும் பூட்டிக்கொண்டதாக கூறுகின்றனர்.

இதுபற்றி பொலிஸிடமோ வேறுயாரிடமோ குடும்பத்தினர் புகார் செய்யாதது ஆச்சரியம் அளிக்கிறது. குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் எல்லோருமே மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போல் இருக்கிறார்கள் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top