பல்வேறு பிரச்னைக்களுக்கு உரிய பிரபல ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோகன்(வயது 25), எலிசபெத் டெய்லர் குறித்து எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார்.நியூயார்க்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த லிண்ட்சேவை, படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்படி அழைக்க
தயாரிப்பாளர் தரப்பு பிரதிநிதிகள் சென்றனர்.
அவர் தங்கியிருந்த அறையின் கதவு உள்புறமாக பூட்டியிருந்தது. எனவே நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. எனவே சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் மயங்கி கிடந்தார்.
உடனே மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மயக்கம் தெளிந்த பழைய நிலைக்கு மாறினார்.
எலிசபெத் டெயிலர் குறித்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிக்க லிண்ட்சே லோகன் கடும் பயிற்சி மேற்கொண்டார். மேலும் 2 நாட்களாக நடந்த படப்பிடிப்பில் இடைவிடாது நடித்தார்.
இதனால் ஏற்பட்ட களைப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக மயக்கம் ஏற்பட்டது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை என அவரது பிரதிநிதி தெரிவித்தார். மேலும் தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக