புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ் கொடிகாமம் பகுதியில் பெண்னொருவருக்கு காதல் குறுஞ்செய்தியை அனுப்பிய நபர் அப் பெண்ணின் கணவரால் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் தையல் வேலை செய்யும் பெண்னொருவரின் சகோதரனால் இளம் குடும்பப் பெண்ணொருவருக்கு தொடர்ந்து
கைத்தொலைபேசியில் காதல் செய்திகளும் அவளை வர்ணித்து தொலைபேசி அழைப்புக்களும் வந்தவண்ணம் இருந்ததாகத் தெரியவருகின்றது.

இதனை ஆரம்பத்தில் சாதாரன நிகழ்வாக எடுத்த குறிப்பிட்ட இளம் குடும்பப் பெண் பின்னர் சில அழைப்புக்களால் அதிர்ந்து போனார்.

தனது நடவடிக்கைகள் அத்தனையையும் தான் எங்கு செல்கின்றேன்… எந்தக் கடைக்குப் போனேன் என்ற தகவல்களைக் கூறியும் அத்துடன் என்ன நிற ஆடை அணிந்திருந்தீர்கள் என்பதையும் அச்சொட்டாக தொலைபேசியில் தெரிவித்த நபரால் கிலி கொண்ட பெண் தனது கணவருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

கணவரும் ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என கூறி மனைவியைக் கொண்டு குறிப்பிட்ட நபரிடம் தொலைபேசியில் கதைத்து வரணி அம்மன் கோவிலுக்கு வரச் சொன்ன போது அந் நபரும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இன்று காலை குறிப்பிட்ட அம்மன் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த அந்த குறிப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை அண்மித்த இளைஞனைக் கண்டு மனைவி திடுக்குற்றுள்ளார்.

தான் அடிக்கடி துணிகள் தைப்பதற்கா செல்லும் வீட்டில் உள்ள இளைஞனே அந்த குறிப்பட்ட நபர் என அறிந்து கொண்டார். இதனிடையே மறைவில் இருந்து வந்த கணவனும் நண்பருமாக இளைஞனை நையப்புடைக்கத் தொடங்கினர்.

இளைஞனிடத்தில் அவர்கள் நடாத்திய விசாரனையில் தனது அக்காவில் தொலைபேசியில் இருந்து குறிப்பிட்ட இலக்கத்தை எடுத்து கதைத்ததாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

மிகக் கடுமையான எச்சரிக்கையுடன் குறித்த இளைஞன் கணவரால் விடுவிக்கப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top