யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள திருமணமாகாத இளம் பெண் ஒருவருக்கு சட்டவிரோதமாக உயிர் ஆபத்து ஏற்படக் கூடிய வகையில் கருச்சிதைவு செய்த ஆயுள்வேத பெண் வைத்தியரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கருக்கலைப்புச் செய்யப்பட்ட குறித்த
இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிக இரத்தப் பெருக்கு காரணமாக, குறித்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் காப்பற்றப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ஆயுள்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட பெண்ணை ஆயுள்வேத வைத்தியர் மல்லாகம் மாவட்ட நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், இரண்டு வார காலத்திற்கு தடுப்புக்காவலில் வைக்கும் படி நீதிமன்றினால் கட்ளையிடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக