புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டெக்சாசில் பக்கத்துவீட்டுக்காரரின் நாயை உயிரோடு சாப்பிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.டெக்சாஸைச் சேர்ந்தவர் மைக்கேல் டெர்ரன் டேனியல்(22). அவர் போதைப் பொருள் உட்கொண்டுவிட்டு பக்கத்துவீட்டுகாரரின் நாயைப் பிடித்து கடித்து அதன் உடம்பில் உள்ள சதையை
எடுத்துள்ளார். அதன் பிறகு அதை அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தார். போதையில் செய்வதறியாது கை, வாய் மற்றும் ஆடையில் ரத்தக்கறையுடன் அமர்திருந்திருக்கிறார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டேனியலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடந்த மே மாதம் மியாமியில் ரூடி யூஜின் என்பவர் போதைப் பொருள் உட்கொண்டுவிட்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிர்வாணக் கோலத்தில் வந்துதெருவோரம் வசிக்கும் நபர் ஒருவரின் முகத்தை கடித்து சாப்பிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் முன்பு அவர் அந்த மனிதனின் முகத்தில் 80 சதவீதத்தை கடித்து திண்றுவிட்டார். இதையடுத்து போலீசார் ரூடியை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top