புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா புதூர் அருகே உள்ள ஜமீன்செங்கல்படையைச் சேர்ந்தவர் வீரபெருமாள். அவருடைய மகள் லதா (வயது 19). அதே பகுதி சென்னமரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் வேலு மகன் செந்தில்முருகன் (23).


லதாவும், செந்தில் முருகனும் காதலித்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். செந்தில் முருகன் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு லதா வெளியே சென்றார். பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், சென்னம ரெட்டிபட்டி கிராமத்தில் வயல் பகுதியில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக போலீஸ் உதவி சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பிணமாகக் கிடந்தது லதா என்று போலீஸ் விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது. மேலும் அவர் தன்னுடைய காதல் கணவர் செந்தில் முருகனால் கொலை கொல்லப்பட்டதும் உறுதியானது.

இதையடுத்து செந்தில் முருகனை போலீசார் கைது செய்தனர். கைதான கணவர் செந்தில்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

லதாவின் உறவினர் வீடு எங்கள் ஊரில் உள்ளது. அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு வருவார். அப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். போனிலும் பேசி வந்தோம். எங்களுக்குள் காதல் அரும்பியது. ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

இந்த காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரியவந்தது. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், காதல் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனமாக வசித்து வந்தோம்.

திருமணத்துக்கு முன்பு போனில் பேசிக் கொள்ளும் போது லதா என்னிடம் செக்ஸ் விஷயங்கள் குறித்தும் பேசுவாள். செல்போனில் ஆபாச படம் வைத்து இருக்கிறீர்களா? சி.டி.யில் ஆபாச படம் பார்த்தது உண்டா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறாள். அப்போது அதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் ஒளிவு மறைவின்றி பழகுகிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டேன்.

திருமணத்துக்கு பின்பு எனது செல்போனை எடுத்து அதில் இருந்த ஆபாச காட்சிகளை பார்த்தாள். நான் தினமும் அருப்புக் கோட்டைக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தாமதமாகத்தான் வருவேன். ஆபாச படங்களில் வருவதைப் போன்று அதிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், இரவில் நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினாள்.

அவளது செக்ஸ் ஈடுபாடு நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் பின்னாளில் அதுவே எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட காரணமானது. செல்போனில் புதிய புதிய ஆபாச படங்களை பதிவு செய்து வரச் சொன்னாள். இதனால் எங்களுக்குள் நாள்தோறும் இரவில் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் உள்ளூர் உள்ள ஒரு வாலிபரிடம் அவள் போனில் பேச ஆரம்பித்தாள். சாதாரணமாகத்தான் பேசுகிறாள் என்று முதலில் நினைத்தேன். பின்னர் அவளது போக்கில் மாறுதல் ஏற்பட்டது. எங்களுக்குள் இருந்து வந்த தகராறை சாதகமாகப் பயன்படுத்தி வேறு யாருடனும் லதா ரகசிய தொடர்பு வைத்து இருப்பாளோ? என்ற சந்தேகமும் வந்தது.

இதனால் அவள் மீதான காதல் மறந்து, வெறுப்பு ஏற்பட தொடங்கியது. சம்பவத்தன்று இரவில் வழக்கம்போல் தகராறு முற்றியது. நான் கோபத்தில் அவதூறாக திட்டினேன். என்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.

நான் தேடிச் சென்ற போது உள்ளூரில் உள்ள ஒரு கோவிலில் அவள் இருந்ததை அறிந்து கொண்டேன். முதலில் சமாதானமாக பேசிப் பார்த்தேன். அப்போது, அவள் என்னை செக்ஸ் விஷயத்தை காரணம் காட்டி திட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வயல்காட்டு வழியாக அழைத்துச் சென்றேன். ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில் திடீர் என்று லதாவை கீழே தள்ளி கழுத்தை நெரித்தேன். சற்று நேரத்தில் உயிர் பிரிந்தது. உடனே வீட்டுக்கு ஓடிவந்து மண்எண்ணெய் கேனை எடுத்துச் சென்று, லதாவின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்தேன். அதன் பின்னர் எதுவும் நடக்காதது போன்று வீட்டில் நாடகமாடினேன்.

லதாவை காணாதது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவித்தேன். வயல்காட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது லதாதான் என்பதை போலீசார் உறுதி செய்தால், குடும்ப தகராறில் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறி நாடகம் ஆடிவிடலாம் என்று திட்டம் போட்டேன்.

ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி நடந்தது தற்கொலை அல்ல, கொலை என்பதை உறுதி செய்து என்னை கைது செய்துவிட்டார்கள். இவ்வாறு செந்தில்முருகன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top