புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மின்னஞ்சல் முகவரி என்பது நமக்கு எப்போதும் இன்றியமையாத ஒன்றாகும். ஜிமெயில் மூலம் இப்போது புதியதாக மின்னஞ்சல் கணக்கு தொடங்க நினைக்கும் ஒருவரால், எண்களை பயன்படுத்தாமல் மின்னஞ்சல் முகவரி உருவாக்க இயலாது (ஆங்கில வார்த்தை கொண்டு). எளிய வகையில் ஈமெயில் முகவரி உருவாக்க உதவும் mail.com பற்றி
காண்போம்.

ஈமெயில் முகவரி உருவாக்க --mail.com

Mail.com ஆனது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்து மிக அதிகம் பேர் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் கணக்கு.

இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது gmail.com, yahoo.com, ymail.com என்று குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே டொமைன் ஆக தரும், ஆனால் mail.com 200 டொமைன்களை தருகின்றது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான ஒன்றை, மிகக் குறைந்த எழுத்துக்களை பயன்படுத்தி உருவாக்கி விடலாம். உதராணம்

1. yourname@mail.com
2. yourname@email.com
3. yourname@engineer.com
4. yourname@asia.com
5. yourname@iname.com
6. yourname@myself.com
7. yourname@writeme.com
8. yourname@post.com
9. yourname@london.com
10.yourname@photographer.net



இது போல மொத்தம் 200 வகையான டொமைன்களில் உங்கள் மின்னஞ்சல் கணக்கை நீங்கள் உருவாக்கலாம். இதன் மூலம் புதியதாக தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நீங்கள் எளிதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விடலாம்.


இதன் மற்ற சில சிறப்பம்சங்கள்:

1. Unlimited ஈமெயில் Storage
2. Spam Filter மற்றும் வைரஸ் மின்னஞ்சல்களில் இருந்து பாதுகாப்பு
3. பயன்படுத்த எளிய அமைப்பு
4.எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி.
5. அலுவலக பயன்பாடுகளுக்கு உகந்த ஒன்று.

இதன் குறைபாடு:

1. ஈமெயில் Forwarding என்ற ஒரு வசதி இலவசமாக இல்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top