புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.ஜி 20 நாடுகளில் கனடா முதலிடத்தை பெறுவதற்கு காரணம், பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதே ஆகும்.


கனடாவைத் தொடர்ந்து ஜேர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகியன முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top