புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


2 குழந்தைகளை கொன்ற தாய்க்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் ஸ்டிபோர்டுஷயர் பகுதியை சேர்ந்தவர் லெய்னி (45) இவரது கணவர் மார்ட்டின். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பெயினில் வசிக்கின்றனர்.இந்த தம்பதிக்கு டேனியல் என்ற 11 வயது மகனும்,
ரெபேக்கா என்ற 5 வயது மகளும் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2010,ம் ஆண்டு டிசம்பரில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் மார்ட்டினை போலீசார் கைது செய்தனர். சிறையிலேயே மார்ட்டின் தூக்கு போட்டு இறந்தார். இதனால் லெய்னி மனவேதனை அடைந்தார். குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட அவர் இரு குழந்தைகளையும் கொடூரமான முறையில் கொலை செய்தார்.

இந்த வழக்கு கிரோனா மாநில கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி அல்டோபா தீர்ப்பளித்தார். இரு குழந்தைகளையும் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்துக்காக லெய்னிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



லெய்னி தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அவருக்கு சிறையில் வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top