முஸ்லிம்களின் புனித நூல் குரான், பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஒரு ஊரில் குரானை ஒருவர் அவமதித்தார். குரானின் பக்கங்களை கிழித்து தெருவில் வீசினார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து லாக்
அப்பில் அடைத்து வைத்து இருந்தனர்.
இதற்கிடையே குரானை அவமதித்தது பற்றிய தகவல் ஊர் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான வாலிபர் போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். திடீர் என்று அவர்கள் போலீஸ் நிலையத்தை தாக்கினார்கள்.
அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த வாலிபரை வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தனர். அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக