புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் வீட்டை காலி செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை முதியவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஜேர்மனியில், உள்ள கார்ல்ஸ்ரூஹியில் பிரிட்டீஸ்கார முதியவர்
ஒருவர், தன் மனைவியுடன் வசித்து வந்தார். செலவு கட்டுப்படியாகாததால் வீட்டை ஏப்ரலில் விற்று விட்டனர். வீட்டை வாங்கியவர் அங்கு குடியேற விரும்பி இவர்களைக் காலி செய்யுமாறு கூறினார்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத முதியவர், வீட்டைக் காலி செய்ய காலை எட்டுமணிக்கு வந்த அதிகாரி, பணியாளர் ஆகியோரை வீட்டுக்குள் அடைத்து அவர்களைக் கட்டி வைத்தார். இவரது கையிலிருந்த துப்பாக்கியை பறிக்க வந்த பணியாளர் ஒருவரை முதலில் சுட்டுக் கொன்றார்.

பின்பு ஒரு மணிநேரம் வீட்டுக்குள் உட்கார்ந்து மது அருந்தினார். மற்றொரு பணியாளரின் கட்டை அவிழ்த்து விட்டார். அவர் உடனே பொலிசாரை தொடர்புகொண்ட படியே வீட்டைவிட்டு வெளியேறி படிக்கட்டுகளில் இறங்கி ஓடினார். அப்போது அவருக்கு வீட்டுக்குள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூன்று மணிநேரம் வெளியே பொறுமையாக இருந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவரோடு பேச முடியவில்லை.

ஆனால் முதியவர் மற்றவரைக் கொன்றுவிட்டு தரை விரிப்புக்குத் தீ வைத்து விட்டார். அந்தப் புகை வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரத் தொடங்கியது. பொலிசார் உடனே கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முதியவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்தார்.

அவரது மனைவியும் கட்டிலில் இறந்து கிடந்தார். அவரது நெஞ்சில் குண்டு பாய்ந்திருந்தது. இறந்த பணியாளரின்(33) மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். அதிகாரிக்கும் மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

மேலும், இந்த முதியவர் மீது கடந்த 2003ஆம் ஆண்டில் ஒரு கடையில் கத்தியைக் காட்டி திருடியதாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top