புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாவலபிட்டி - ஓவிடமஹகும்புர பகுதியில் 15 வயது சிறுமிமை கடத்திச் சென்று கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2ம் திகதி தொடக்கம் இடம்பெற்றுள்ளதுடன் நேற்றைய தினமே நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை அடுத்து விசாரணை நடத்திய பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (06) நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் 11 வயது சிறுமிமை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இன்று (06) அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top