அமெரிக்காவில் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக விமானத்தில் சென்ற கணவன், மனைவி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த ஸ்டீபன் நைட்(வயது 64), அவரது மனைவி கிலியன் நைட்(வயது 60) இருவரும், அமெரிக்காவின்
அலாஸ்கா மாகாணத்தில் உள்ள இயற்கை காட்சிகளை பார்வையிடுவதற்காக, குட்டி விமானத்தில் சென்றனர்.
இந்த விமானம் அங்குள்ள பார்பேங்க் பகுதியில் சென்ற போது, விபத்துக்குள்ளானதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த பகுதியில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக