புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருச்சி அருகே அண்ணியுடன் முறைகேடான உறவு வைத்திருந்த கணவனை சரமாரியாக கத்தியால் குத்தியும், கணவனின் மர்ம உறுப்பை அறுத்தும் படுகொலை செய்தார் மனைவி. அவரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி அருகேயுள்ள கீழபஞ்சப்பூரைச் சேர்ந்தவர் வரதராஜ் (40). சலூன்
கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாரதா (35). வரதராஜின் அண்ணன் மனைவி வசந்தா, இவருக்கு வயது 36. வசந்தாவின் கணவர் பெரம்பலூரில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

வரதராஜுக்கு, தனது அண்ணியுடன் முறைகேடான நட்பு ஏற்பட்டு விட்டது. இந்த உறவால் சாரதா அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தனது அண்ணிக்கு பஞ்சப்பூர் அருகே தனி வீடு பார்த்து குடி வைத்து விட்டார் வரதராஜ். மேலும், வசந்தாவுக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்தார் சாரதா. நேற்று இரவு நன்கு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் வரதராஜ். அப்போது கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த சாரதா, கணவர் வைத்திருந்த சவரக் கத்தியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக அவர் மீது பாய்ந்தார். உடல் முழுக்க சரமாரியாக குத்திக் கிழித்தார். மர்ம உறுப்பையும் கத்தியால் அறுத்தெடுத்தார்.

வலியால் துடித்த வரதராஜ் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் வரதராஜின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாரதாவைக் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top