கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பண்டாரவளைப் பகுதியின் 21 வயது நிரம்பிய யுவதியுடன் கொழும்பைச் சேர்ந்த இளைஞனொருவர் நட்பினை ஏற்படுத்திக் கொண்டு காதலித்துள்ளார்.
அவ்வேளையில் காதலியின் நிர்வாணப் புகைப்படமொன்றினை காதலன் எடுத்து வைத்துள்ளார்.
அப்படத்தை ‘பேஸ்புக்’கில் இணைக்கப்போவதாகக் கூறி பயமுறுத்தி இரு தடவைகள் மூன்றரை இலட்ச ரூபாவினைக் கப்பமாக பெற்றுள்ளதுடன், மேலும் இரண்டு இலட்ச ரூபா தேவையென்றும், அதைக் கொடுக்காவிட்டால், நிர்வாணப் படத்தினை ‘பேஸ்புக்’ இல் இணைக்கப் போகின்றேன் என்று எஸ். எம். எஸ். மூலம் காதலிக்கு காதலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இவ்யுவதி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
காதலியின் கோரிக்கையை ஏற்று காதலன் இரண்டு இலட்ச ரூபாவினை கப்பமாகப் பெற பண்டாரவளைக்கு வந்தபோது பொலிஸார் அந்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவ் இளைஞனுடன் வந்த அவனது நண்பரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகள் நிறைவுற்ற பின்னர், இருவரையும் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக