புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேற்கு வங்கமாநிலத்தில் பள்ளி சிறுமியொருவரை சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்திய சம்பவம் போல தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன்மாளிகை கிராமத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்ற மாணவன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு, விடுதியில் தங்கியிருக்கும் இம்மாணவன் இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க செல்லவேண்டுமென அங்கிருந்த ஆசிரியர் ஒருவரிடம் அனுமதி கோரியுள்ளான்.

இதற்கு அந்த ஆசிரியர் அனுமதி மறுத்ததுடன் அம்மாணவனை பிரம்பால் அடித்தும் சிறுநீரை கையில் பிடித்துக்குடிக்கும்படியும் துன்புறுத்தியுள்ளார். இதனால் அவ்விடுதியிலிருந்து தப்பித்த மாணவன் இதுகுறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தான்.

இந்த புகாரை அறிந்த தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணையில் ஆசிரியர்கள் அம்மாணவனை துன்புறுத்தியது தெரியவந்ததையடுத்து இதில் ஈடுபட்ட 3 ஆசியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதி பொலிஸாரும் மாணவனின் புகாரை ஏற்று அந்த ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top