புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் இன்றளவும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தான் உள்ளன.அவர்கள் இன்றும் சட்ட திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். சமீபத்தில் தலைநகர் காபூல் அருகேயுள்ள குயிம்சோக் என்ற கிராமத்தில், கள்ளக்காதலில் ஈடுபட்ட ஒரு பெண்ணை
பொதுமக்கள் முன்பு சுட்டு கொன்றனர்.

கிராம மக்கள் முன்னிலையில் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், சால்வையால் மூடப்பட்ட ஒரு பெண் முழங்காலிட்டு அமர்ந்துள்ளார். அவர் அருகில் நிற்கும் தலிபான் தீவிரவாதி அவரது தலையில் பலமுறை துப்பாக்கியால் சுடுகிறான். அதை தொடர்ந்து அப்பெண் ரத்த வெள்ளத்தில் சாய்கிறாள்.

இதுபோன்ற கொடூர சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை நடந்தது. அப்போது பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவர்கள் கல்வி பயிலவும், அலங்கார ஆடைகள் அணியவும், சுதந்திரமாக நடமாடவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டு 11 ஆண்டுகள் கடந்தும், இது போன்ற சம்பங்கள்  அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top