புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் வீசிய கடும் புயல் காற்றினால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  இதில் நால்வர் உயிரிழந்தனர், இருபது பேர் காயமுற்றனர்.இதனால் சாலைகளும், பாலங்களும் பழுதுபட்டன. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு
சென்று தங்கினர்.

டிரெஸ்டென் அருகில் உள்ள ஹய்டினா என்ற ஊரில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த சிறுமி மின்னல் தாக்கியதால் உயிரிழந்தாள். சேக்ஸனி அருகிலுள்ள கோர்லிட்ஸ் என்ற ஊரிலும் மின்னல் தாக்கி ஒருவர் மரணமடைந்தார்.

லாஸ்நிட்ஸ் அருகில் காரின் மீது மரம் சாய்ந்து விழுந்ததால் காருக்குள்ளேயே நசுங்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். லோயர் சேக்ஸனி அருகில் லூனேபர்கில் இருசக்கர வாகனத்தில் வந்த 47 வயதுப் பெண்மணி மீது மரம் விழுந்ததால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பெர்ன்ஸ்டாட் நகருக்குள் தண்ணீர் சாலைகளில் ஓடியதால் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க மணல் மூட்டைகளை மீட்புப்படையினர் அடுக்கி வைத்தனர்.

ஆல்ப்ஸ் மலையில் மலையேறிக் கொண்டிருந்த பதினைந்து பேர் மின்னல் தாக்கியதால் காயமடைந்தனர். இந்தப் பதினைந்து பேர் கொண்ட குழுவில் ஒரு பத்து வயதுச் சிறுவனும் இருந்தான்.

மேலும், இன்று மேற்குப்பகுதியில் புயல்மழை இன்னும் கடுமையாகும் என்றும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இடிமழை பெய்யும் என்றும் ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் ஜேர்மனியின் வானிலை அறிக்கை தெரிவித்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top