பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வறுமை காரணமாக தனது குழந்தையை ரூ. 62 க்கு விற்றுள்ள சம்பவம் நாட்டின் வறுமையை எடுத்துக்காட்டுகிறது.ஷன்னு என்ற பெயருடைய இப்பெண் பீகாரில் அராரியா மாவட்டத்தில்
வசிக்கின்றார்.
இவருடைய கணவர் ஊனமுற்றவர் என்பதால் இவரால் சம்பாதிக்க முடியாது. மேலும் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற நேபாளத்தை சேர்ந்தவர்களிடம் ஷன்னு, தனது 4 வயது குழந்தையை விற்றார். குழந்தையை ரயிலில் ஏற்றிவிட்டு நின்ற ஷன்னுவிடம் ரயில்வே பொலிஸார் விசாரணை நடத்தியதில் இந்த தகவல் வெளி வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக