புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். சுன்னாகத்தில்,  கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச் சோந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.


குறிப்பிட்ட முகாமில் உள்ள பொது மண்டபத்தில் நேற்று மாலை வேளையில் இவர்கள் குறிப்பிட்ட ஆபாசப்படங்களைக் கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள்.

ரோந்துக் கடமையில் சென்ற பொலிஸாரைக் கண்டு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.

சந்தேகம் கொண்ட பொலிஸார் பொது மண்டபத்தில் சென்று பார்த்த வேளையில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதனைக் கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஆபாசப்படம் கைத்தொலைபேசியில் பார்த்த சம்பவம் தெரியவந்தது.

அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top