மனநலம் குன்றிய 17 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமையால் 5 மாத கரு உண்டாகிய நிலையில் அப்பெண்ணை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ய முயற்சித்ததாக மாமனார் மீது தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
தெல்லிப்பழை, சோடாக் கொம்பனித் தெருவுக்கு அருகிலுள்ள காளிகோயில் வீதியில் வசிக்கும் குறித்த பெண்ணை 5 மாதங்களுக்கு முன்னர் அவருடைய மாமனார் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் குறித்த பெண் கர்ப்பவதியாகிவுள்ளார். இதனை அறிந்த மாமனார் தனக்கு களங்கம்
ஏற்படும் எனக் கருதி அந்த மனநலம் குன்றிய பெண்ணைத் திட்டமிட்டு கிணற்றில் தள்ளிக் கொலை செய்ய முயற்சித்த வேளை பெண்ணின் தாயாராலும் உறவினர்களாலும் குறித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் பெண்ணினுடைய மாமனார் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இவருக்கு
எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் பெண்ணின் மாமனாரைத் தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக