பீகாரில் +1 மாணவியை 5 பள்ளி மாணவர்கள் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியி்ட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பள்ளி ஒன்றில் +1 படிப்பவர் 17 வயதான ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரை
காதலிப்பதாக பள்ளி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி அந்த மாணவர் ராணியை ராஜ்வன்சி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். காதலன் தானே அழைக்கிறார் என்று ராணியும் அங்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் அந்த மாணவனுடன் மேலும் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் 5 பேரும் ராணியை கற்பழித்து அதை வீடியோவும் எடுத்தனர். தற்போது அந்த வீடியோவை சிடி மற்றும் எம்.எம்.எஸ். ஆக மாற்றி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ராணியைக் கெடுத்தவர்களில் இருவர் அவருடன் ஒரு காலத்தில் பள்ளியில் படித்தவர்கள் ஆவர்.
இது குறித்து மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி கூறுகையில்,
ஒரு மைனர் பெண்ணை 5 மாணவர்கள் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை நாங்கள் செய்தித்தாளில் பார்த்து கடந்த செவ்வாய்க்கிழமை தான் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு நான் அந்த மாணவியை சந்தித்து வாக்குமூலம் வாங்கினேன். அதன் அடிப்படையில் போலீசில் புகார் கொடுத்தேன். சுல்தான்கஞ்சில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாட்னா தலைமை நீதிபதி ஆர்.கே. யாதவ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக