புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நிரோஷா (வயது21). இவரும் பொகளூர் பங்கரிஷி குப்பத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ரவிக்குமார் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது நிரோஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலை ஏற்க மறுத்த பெற்றோர்
நிரோஷாவை அவரது அத்தை மகனான பல்லலகுப்பத்தை சேர்ந்த பிரபாகரன்(25) என்பவருக்கு
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்தாலும் காதலன் பாதிரியார் ரவிக்குமாரை நிரோஷாவால் மறக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி நிரோஷா தன் வீட்டில் இருந்து 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் மாஜி காதலனான பாதிரியார் ரவிக்குமாரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதையறிந்த பிரபாகரன் தன்னை மனைவி ஏமாற்றி விட்டதாக மேல்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து நிரோஷா மற்றும் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top