புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 63 வயதான நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



அக்கரைப்பற்று முதலாம் பிரிவிலுள்ள 11 வயதான குறித்த சிறுமி நேற்று முற்பகல் அருகிலுள்ள கடையில் உணவு வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த சிறுமியை கடை உரிமையாளர், கடையினுள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top