நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி ஊராட்சி பொடக்கா நாயக்கனூரை சேர்ந்தவர் சக்திவேல்(28). இவர் அமுதா என்ற பெண்ணை காதல்
திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6
வயதில் ஒரு மகள் உள்ளாள்.
சக்திவேல் திருமலைப்பட்டி அருகே உள்ள ராமியாபட்டியில் தேங்காய் நார் உரிக்கும் தொழிற்சாலையில் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். இதே போல் எர்ணாபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி நிர்மலா (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சக்திவேல் வேலைப்பார்க்கும் அதே நிறுவனத்தில் நிர்மலாவும் வேலைப்பார்த்து வந்தார். இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதுவே நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியினர் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தனர். அரசல், புரசலாக இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனால் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி நாம் இணைந்து வாழ முடியாது. எனவே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று சக்திவேல்-நிர்மலா ஆகியோர் திருமலைப்பட்டி அருகே உள்ள பாலப்பட்டி கரடு பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு 2 பேரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் மதுவில் விஷம் கலந்து 2 பேரும் குடித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் மயங்கி கிடந்தனர். 2 பேரும் தனியாக மயங்கி கிடந்ததை பார்த்த சிலர் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அப்போது சக்திவேல் முன்பே இறந்து இருப்பது தெரியவந்தது. மேலும் நிர்மலாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக