புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது கணவர் ஈரானில் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டதாக சந்தேகப்பட்ட மனைவி, தனது கணவருடன் உறவு வைத்துக் கொண்டு அதன் பின்னர் சரமாரியாக அவரைக் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அந்த நபர் தற்போது உயிர்
பிழைத்துள்ளார். மனைவிக்கு 11 வருட சிறை தண்டனை கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸைச் சேர்ந்தவர் நூஷின் நெட்ஜா. 30 வயதாகும் இவரது கணவர் பெயர் மேடி சங்காசின். இவருக்கு வயது 36. மேடியின் சொந்த ஊர் ஈரானாகும். சமீபத்தில் மேடி ஈரான் போயிருந்தார். அப்போது அங்கு அவர் வேறு ஒரு கல்யாணம் பண்ணிக் கொண்டதாக நூஷினுக்குச் சந்தேகம் வந்தது.

இதையடுத்து தனது கணவரைப் பழி தீர்க்க அவர் தீர்மானித்தார். சம்பவத்தன்று தனது கணவருடன் அவர் உறவு வைத்துக் கொண்டார். அதன் பின்னர் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறிய அவர் காய் நறுக்கப் பயன்படும் கத்தியை எடுத்து தாறுமாறாக கணவரைக் குத்தினார். இதில் அவர் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுத் துடித்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் நூஷினைக் கைது செய்தனர். மேடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து உயிரை மீட்டனர். நூஷின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த விசாரணை முடிவில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நூஷின் மீது கொலை முயற்சி, உள்நோக்கத்துடன் காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இதில் கொலை முயற்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் உள்நோக்கத்துடன் காயப்படுத்துதல் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார்.

மேடியும், நூஷினும் ஈரானைச் சேர்ந்தவர்கள்தான். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஒரு பஸ்சில் வைத்து இவர்களது காதல் மலர்ந்தது. ஆனால் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. அடிக்கடி சண்டை வந்துள்ளது. நீ எனக்கு விசுவாசமாக இல்லை என்று மேடியுடன் அடிக்கடி நூஷின் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மேடி ஈரானுக்கு தனது குடும்பத்தைப் பார்க்கப் போயிருந்தார். இதனால் சந்தேகமடைந்த நூஷின், தனது கணவர் 2வது திருமணம் செய்திருக்கலாம் என சந்தேகப்பட ஆரம்பித்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி தனது கணவருடன் சமாதானமாகப் போவது போல நடித்து அவரை படுக்கைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு அவருடன் உறவில் ஈடுபட்டார். அதன் பின்னர் சர்பிரைஸ் தருவதாக கூறி கத்தியால் குத்தி விட்டார்.

கத்தியால் குத்தியதில் அவரது முக்கிய உடல் உறுப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முதலில் இதைப் பார்த்து கொண்டிருந்துள்ளார் நூஷின். பிறகு என்ன தோன்றியதோ அவசர போலீஸாருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார்.

இந்த சம்பவம் லீட்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சிறையில் அடைபட்டுள்ளார் நூஷின்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top