மேற்குவங்க மாநிலத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக சிறுமியொருவரை பலவந்தப்படுத்தி சிறுநீரைக் குடிக்க வைத்த விடுதிக் காப்பாளர் கைது செய்யப்பட்டார்.விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் 5-ம் வகுப்பு மாணவிக்கு படுக்கையில் சிறுநீர்
கழிக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விடுதியில் படுத்திருக்கும்போது சிறுநீர் கழித்ததற்காக அவரை பலவந்தப்படுத்தி சிறுநீரை அவரது வாயில் விடுதி காப்பாளர் ஊற்றியுள்ளார்.
இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். மேலும் தேசிய குழந்தைள் பாதுகாப்பு ஆணையமும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டதுடன், அவ்விடுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அந்த சிறுமியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக