சித்தி மகளுடன் தப்பான உறவை வைத்திருந்த நபர், தனது சித்தி மகள், தனது தோழியின் காதலனுடன் சிரித்துப் பேசிப் பழகி வந்ததால் கோபமடைந்து மூன்று பேரையும் கழுத்தை அறுத்து தீ வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அரக்கோணம் அதவுல்லா சாகிப் தெருவில் ஒரு வீட்டில் தீனதயாளன் என்பவரது 22 வயது மகள் ஷர்மிளா, சதயதுல்லா என்பவரது மனைவி ஆஷா (24), அரக்கோணம் பள்ளூரை சேர்ந்த மாதவன் (24), ஆகிய 3 பேரும் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதில் ஆஷா, மாதவன் இருவரும் நிர்வாண நிலையில் ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் ஆஷாவும், மாதவனும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தெரியவந்ததாவது…
ஷர்மிளா, ஆஷா, மாதவன் ஆகிய மூவரும் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். காதல் தகராறில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆஷாவும், மாதவனும் கள்ளக்காதலர்கள். இவர்கள் அடிக்கடி ஷர்மிளா வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருப்பது வழக்கமாம். கிட்டத்தட்ட ஷர்மிளாதான், இவர்களின் கள்ளக்காதலுக்கு பாதுகாவலாக இருந்து வந்துள்ளார், கள்ளக்காதல் ஜோடிக்கு இடமும் கொடுத்து உல்லாசமாக இருக்க விட்டுள்ளார்.
ஷர்மிளாவின் செல்போனில் குறிப்பிட்ட ஒரு எண் அதிகமாக பதிவாகி இருந்தது. அந்த எண்ணுக்குரியவர் காட்பாடியை சேர்ந்த ரோல்சன் கருணாகரன் என்று தெரிய வந்தது. ஷர்மிளா, இவருக்கு சித்தி மகள் ஆவார். அதாவது தங்கை முறை வருவார். ஆனால் ஷர்மிளாவும், ரோல்சனும் காதலித்து வந்துள்ளனர். தவறான உறவைக் கொண்டிருந்தனர்.
போலீஸார் ரோல்சனைப் பிடிக்க தீவிரமாக வலை வீசினர். இதில் அவர் சிக்கினார். அவர் போலீஸில் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
ஷர்மிளா எனது சித்தி மகள். தங்கை உறவு முறையான அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மாதவனும் ஆஷாவும் அடிக்கடி ஷர்மிளாவின் வீட்டுக்கு வருவார்கள். மாதவன் ஷர்மிளாவுடன் சிரித்து சிரித்து பேசுவான். இது எனக்கு பிடிக்கவில்லை.
மேலும் அவர்கள் இருவரும் ஷர்மிளாவின் வீட்டுக்கு வந்து பழகுவதிலும் எனக்கு விருப்பமில்லை. அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதே என்று ஷர்மிளாவிடம் அடிக்கடி தகராறு செய்தேன் அவள் கேட்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு வந்தது.
சம்பவத்தன்று ஷர்மிளாவுக்கு அறிவுரை கூற அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காய்கறி அறுக்கும் கத்தியால் ஷர்மிளாவின் கழுத்தை அறுத்தேன்.
அப்போது வீட்டில் ஒரு அறையில் மாதவனும், ஆஷாவும் ஒட்டுத் துணியின்றி உல்லாசமாக இருந்தனர். அதைப் பார்த்து வெகுண்ட நான், அவர்களை நிர்வாண நிலையிலையே கழுத்தை அறுத்தேன். அவர்கள் சுயநினைவை இழந்தனர். அவர்கள் அணிந்திருந்த துணிகள் கட்டில் மீது கிடந்தது. ஆத்திரத்தில் துணிகளை அவர்கள் மீது வீசினேன். அப்போது மாதவன் சட்டை பையிலிருந்து தீப்பெட்டி கீழே விழுந்தது. உடனே துணிகளுக்கு தீ வைத்து அவர்களையும் கொளுத்தினேன். பின்னர் அங்கிருந்து தப்பிசென்று விட்டேன் என்றார்.
தற்போது ஷர்மிளாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்தில் அறுபட்டதால் அவரால் பேச முடியவில்லை. பேசும் நிலை வந்த பிறகுதான் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக