திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி 23.07.2012 அன்று மாலை தனது வீட்டிலேயே தூக்கிட்டு
தற்கொலை செய்துகொண்டார்.
இதனைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் செங்கம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
தற்கொலைக்கு முன் மாணவி எழுதியிருந்த கடிதத்தில், நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்
ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடன் இருக்க கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என மூன்று பக்க கடிதத்தில் அகிலா எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தைக்கொண்டு மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக