குடிபோதையில் 65 வயது மாமியாரை பலாத்காரம் மருமகனை நாக்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.நாக்பூர் அருகே கடோல் கிராமத்தைச் சேர்ந்த கவானி என்பவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஓராண்டுக்கு முன்புதான் மகளுக்கு திருமணம் ஆனது. இரண்டு
மகன்களும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த கவானி வீட்டில் இருந்த மகன்கள் இருவரையும் வெளியே போய் படுக்கச் சொல்லியிருக்கிறார். அவரது மனைவி உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றுவிட்டா. இதுதான் சமயம் என்று கருதி கவானி, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை கட்டிப் பிடித்து கீழே தள்ளி கற்பழித்திருக்கிறார்.
காலையில் வீட்டுக்குத் திரும்பிய மகளிடம் தாம் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறி புலம்பியிருக்கிறார் தாய். இதையடுத்து தமது கணவன் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் மனைவி. இப்பொழுது கவானி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக