புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சென்னை மேடவாக்கம் விமலா நகரைச் சேர்ந்தவர் நாகேஷ்குமார் (வயது40). திருமணம் ஆன இவர் பெரும்பாக்கம் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் பெரும்பாக்கம் சவுமியா நகரைச் சேர்ந்த காமாட்சி (வயது 35). என்ற பெண் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

ஜவுளிக்கடையின் வரவு-செலவு கணக்கு அனைத்தையும் காமாட்சிதான் கவனித்து வந்தார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. நாகேஷ் குமாருக்கும், காமாட்சிக்கும் கள்ளக்காதல் இருப்பதாக அவரது உறவினர்கள் சந்தேகப்பட்டனர். காமாட்சியை வேலையில் இருந்து நீக்கும் படி நாகேஷ்குமாரிடம் சொல்லி வந்தனர். ஆனால் நாகேஷ்குமார் அவர்களது பேச்சை கேட்கவில்லை.

நேற்றிரவு 10 மணிக்கு ஜவுளிக்கடையை அடைத்தவுடன் நாகேஷ் குமாரும், காமாட்சியும் 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடோனுக்கு சென்று கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் அரிவாளுடன் வந்து நாகேஷ் குமாரை சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த காமாட்சியையும் ஆவேசத்துடன் கழுத்தை பிடித்து நெரித்தனர்.

காமாட்சி அவர்களிடம் இருந்து விடுபட முயன்றார் ஆனால் ஆவேசத்துடன் இருந்த கொலையாளிகள் அவரையும் அரிவாளால் வெட்டினர். மயக்கம் அடைந்த காமாட்சியை கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்கவிட்டு கொன்றனர்.

கயிறு அறுந்து காமாட்சி உடல் கீழே விழுந்து விட்டது. 2 பேரும் இறந்த பிறகு கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.   இரட்டைக் கொலை பற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மோப்ப நாய் சீமான் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்தது அங்கிருந்து நேராக கொலை செய்யப்பட்ட நாகேஷ் குமாரின் வீட்டு முன்பு நின்று விட்டது. இதனால் நாகேஷ் குமாரின் உறவினர்கள் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதையொட்டி நாகேஷ் குமாரின் மைத்துனர்கள் 2 பேரையும் காமாட்சியின் கணவரையும் பிடித்து விசாரிக்கின்றனர். நகை-பணத்துக்காக கொலை நடக்க வில்லை. காமாட்சி அணிந்திருந்த நகை அப்படியே உள்ளது. பணமும் திருடப்படவில்லை. எனவே கள்ளக் காதல் பிரச்சினையில் உறவினர்கள் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

இதனால் உறவினர்களை பிடித்து வந்துள்ளோம். இன்று மாலைக்குள் கொலையாளிகள் பற்றிய விவரங்களை தெரிவிப்போம் என்றனர் போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top