சுவிட்சர்லாந்தில் உள்ள கரேஜ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் (Carouge apartment) செம்கார்(Semhar’s) என்ற 12 வயது சிறுமி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வீட்டிலிருந்து சென்ற ஒரு மணி நேரத்தில் இச்சிறுமி இறந்திருப்பது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிசார் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜெனிவா செய்திதாள்கள் இச்சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளன. பொலிசாரும் இதனை உறுதி செய்துள்ளனர். இறந்து கிடந்த சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான தடையங்கள் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கடைசியாக தனது வீட்டிலிருந்து குறுக்கே உள்ள தெருவில் தனது தோழியுடன் நடந்து சென்றதை அருகில் உள்ளவர்கள் அவதானித்துள்ளனர். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து செம்கார்(Semhar’s) குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிலிற்கு கீழ் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக