புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் பெருமாள், வயது-32. இவர் கரூரில் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கும், கரூர் மாவட்டம் வாங்கல் சக்கராபாளையத்தை சேர்ந்த சித்ரா, வயது-25, என்பவருக்கும், ஆறு ஆண்டுக்கு முன் திருமணம்
நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

போதைக்கு அடிமையான பெருமாள் நாள்தோறும் குடித்து விட்டு மனைவி சித்ராவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் சித்ரா, அவரது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கரூரை அடுத்த சக்கராபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து பெருமாளும், சக்கராபாளையத்துக்குச் சென்று மனைவி சித்ராவுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பெருமாள் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது சித்ராவுக்கும், பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தினமும் தொல்லை போதையில் தொல்லை கொடுத்துகொண்டிருந்த பெருமாள் மீது இருந்த ஆத்திரத்தில், சித்ரா, வீட்டுக்கு வெளியில் இருந்த மண் வெட்டியை எடுத்து வந்து  பெருமாளின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

மயங்கி கீழே விழுந்த பெருமாள் அப்டியே படுத்துக்கொண்டார். போதையில் இருந்த  பெருமாள் நிதானம் தவறி விட்டதாக நினைத்த சித்ராவும் பெருமாளுக்கு அருகிலேயே படுத்து தூங்கி விட்டார்.

நேற்று காலை, 6 மணிக்கு வேலைக்குச் செல்ல பெருமாளை, சித்ரா எழுப்பியுள்ளார். அப்போது தான் அவர் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கரூர் டவுன் டி.எஸ் .பி., மனோகரன், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top