புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் 2012 - கோடைகால
ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை Steels & McGowan சந்திப்பில் அமைந்துள்ள "மிலிக்கன் பூங்கா திடலில்" முற்பகல் 10 : 00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதனை எம்மூர் மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.


இவ் விளையாட்டுப் போட்டிகள் யாவும் கனடா வாழ் எம்மூர் மக்களால் முன்னெடுத்துச் செயல் பெறும் தொழில் அதிபர்களினதும், தொழில் முகவர்களினதும் அனுசரனைகளுடன் இடம்பெறுவதால்; அவர்களால் வழங்கப்பெறும் பெறுமதி மிக்க தங்க நகைகளும், வீட்டுப் பொருட்களும், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் பரிசாக வழங்கப்பெறும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.


நிகழ்ச்சிகள்:

  • பழம் பெறுக்கல் (சிறுவர்களுக்கு)
  • முயல் பாய்ச்சல் (சிறுவர்களுக்கு)
  • வினோத உடை (பொதுவானது)
  • ஓட்டப் போட்டி 100 மீற்ரர், 50 மீற்ரர் (கீழ், மத்திய, மேற்பிரிவினர்க்கும் முதியோர்க்கும்)
  • தடையோட்டங்கள் - (எல்லாப் பிரிவினர்க்கும்)
  • தேசிக்காய்-கறண்டி ஓட்டம் (எல்லாப் பிரிவினர்க்கும்)
  • ஜோடி சேர்தல் - கணவன் மனைவியர்க்கு
  • கயிறு இழுத்தல் எல்லாப் பிரிவினர்க்கும் (ஆண்கள் எதிர் பெண்கள்)
  • முட்டியடித்தல் (பொதுவானது)
  • வழமைபோல் மதிய போசனமாக கூழும், மாலை சிற்றூண்டியும், இரவு கொத்து றொட்டியும் வழங்கப்படும்



கனடா - ரொறொன்ரோ நகரில் பரந்து வாழும் எம்மூர் மக்கள் ஒன்றுகூடலில் இணைது கூடிக் குலாவி மகிழ்வுறும்போது; உறவுகள் மேம்படுகிறன, ஒற்றுமை வளர்கின்றது, புதிய உறவுகள் அறிமுகமாகின்றனர், இளையோர் இடையே புதிய நட்பும், உறவும், ஒற்றுமையும் உருவாகின்றன. 


விளையாட்டில் திறமைசலிகள் கௌரவிக்கப்படுகின்றனர். விளையாட்டுகளில் விளையாட்டாக தோல்விகளைச் சந்தித்து சகித்துக் கொள்ளும் மனப்பாங்கைப் பெறுவதுடன். முயற்சி செய்து வெற்றி பெறவும் தூண்டப்படுகின்றனர். 


இவ் ஒன்றுகூடலின்போது பல புதிய விளையாட்டுக்களும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற எலா விளையாட்டுக்களும் இடபெறும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.


இவ் விழாவை எல்லோரும் ஒன்றுகூடி குதூகலிக்கும் இன்ப நாளாக கொண்டாட எம்மூர் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்


பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top