புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஷ்யாவில் மாட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். பேசத் தெரியாத இந்தச் சிறுமி மாடு போல கத்துகிறாள். அவளை பெற்றோரே அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் தீவிர
விசாரணை நடைபெற்று வருகின்றது. ரஷ்யாவின் உரல் மலையை ஒட்டிய சோலிகாம்ஸ்க் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வசிக்கும் தம்பதியர், சில மாடுகளை வைத்து வளர்க்கின்றனர்.

அவர்களது மாட்டுக் கொட்டகையில் இருந்து சிறுமி கத்துவது போல அவ்வப்போது சத்தம் வருகிறது என்று அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் பொலிசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, அங்கு பொலிசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது உடல் முழுவதும் சாணி அப்பிய நிலையில், மாடுகளுக்கு நடுவில் ஒரு சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர். கிழிந்த துணியை உடம்பில் சுற்றியிருந்தாள்.

அவளுக்கு எதுவும் பேசத் தெரியவில்லை. மாடுகள் போலவே, ‘ம்மா.. ம்மா’ என்று கத்தினாள். இதையடுத்து, அவளை அங்கிருந்து மீட்டு, மறுவாழ்வு மையத்துக்கு பொலிசார் அனுப்பினர்.

இதுபற்றி பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், சிறுமியின் பெற்றோர்தான் அவளை அங்கு அடைத்து வைத்திருந்தனர். சிறுமிக்கு சாப்பிட தெரியவில்லை, பாத்திரத்தில் பால் கொடுத்தால் மட்டும் குடிக்கிறாள்.

பேச்சும் வரவில்லை, மாடு போல கத்துகிறாள். வெளிஉலக தொடர்பு இல்லாமல் பல ஆண்டுகளாக மாட்டுக் கொட்டகையிலும் பாழடைந்த ஸ்டோர் ரூமிலும் அவளை பெற்றோர் அடைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் கூறினர்.

மறுவாழ்வு மையத்தில் இருந்த சிறுமி தற்போது ஒரு குடும்பத்தின் அரவணைப்பில் உள்ளார். இதுபோன்ற சம்பவம் ரஷ்யாவில் புதிதல்ல, ரஷ்யாவின் சிட்டா நகரில் உள்ள பிளாட்டில் நாய்களுக்கு நடுவில் அடைத்து வளர்க்கப்பட்ட நடாஷா மிகைலோவா என்ற 5 வயது சிறுமி 2009ல் மீட்கப்பட்டாள்.

பேசத் தெரியாத அவள் நாய் போல குரைத்தாள். தட்டில் வைக்கப்பட்ட பாலை நக்கி குடித்தாள் என்பதும், பெற்றோரே அவளை இவ்வாறு அடைத்து வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top