நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு மொட்டை அடித்து சூடு போட்ட ராணுவ வீரர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மேற்குதெருவை சேர்ந்தவர் முருகன். இவர் ராணுவத்தில் வேலை
பார்த்து வருகிறார். இவருடைய மனைவி குருஈஸ்வரி (வயது 24). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்வில் திடீரென்று சந்தேக புயல் வீச தொடங்கியது. சில நாட்கள் கழித்து மனைவியின் நடத்தையில் முருகன் சந்தேகப்பட தொடங்கினார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் முருகன், தன்னுடைய மாமியார் மற்றும் உறவினர்களை சொத்து சம்பந்தமாக பேச வேண்டும் என்று வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே முருகன் மனைவி குருஈஸ்வரியிடம் வழக்கம் போல் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது, குருஈஸ்வரியை வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, உடம்பில் பல இடங்களில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவிக்கு மொட்டை அடித்து கொடுமை படுத்தியதாக தெரிகிறது. வீட்டுக்கு வந்திருந்த குருஈஸ்வரியின் தாய் காளியம்மாள் இதை தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. முருகன், தன்னுடைய மாமியாரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த காளியம்மாள், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து குருஈஸ்வரி தருவைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தினார். ராணுவ வீரர் முருகன், அவருடைய தம்பி சண்முகசுந்தரராஜ், தாய் பூசம்மாள் ஆகிய 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக