மனைவியின் பேச்சை கேட்டு தன் தாயை மயானத்தில் விட்டுச்சென்ற மகனை ஆந்திர மாநில பொலிஸார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் விஜய நகரத்தைச் சேர்ந்த பைடி தல்லி 70, என்பவருக்கு சீனு என்ற மகன் இருக்கிறான்.சீனு வீட்டில் அவரது மனைவிக்கும் தாய்க்கும் மத்தியில்
அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதன் காரணத்தினால் தாயை வேறெங்காவது விட்டு வரச்சொல்லி மனைவி சீனுவை நச்சரித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று, தாய் பைடி தல்லியை அழைத்துக்கொண்டு சீனு விசாகப்பட்டிணம் சென்றார். அங்கிருந்து ஆட்டோவில் ஸ்ரீராம் நகர் என்ற ஊருக்கு சென்றனர்.
அங்குள்ள மயானத்தில் தாய் பைடி தல்லியை கீழே இறக்கி விட்டு சாப்பாடு வாங்கி வருவதாக சொல்லி விட்டு திரும்பி வந்து விட்டார். இதையடுத்து மகன் சாப்பாடுடன் வருவான் என்று நம்பியே பைடி தல்லி கடந்த 10 நாட்களாக காத்திருந்துள்ளார்.
பின்னர் மெதுவாக நடந்து அருகிலுள்ள ஊருக்கு சென்றுள்ளார் பைடி தல்லி. அங்கு நடந்த விடயங்களை கூறினார். இதையடுத்து அவ்வூர் மக்கள் பொலிஸாரிடம் புகார் தெரிவிக்க சீனுவை பொலிஸார் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக