யாழ்ப்பாணத்தில் உள்ள அரியாலை மேற்கு பிரதேசத்தில் கலைமகள் வீதியை சேர்ந்த தேவராசா தேவசெந்தூரன் என்பவரின் இல்லத்தில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னைகள் முளைத்து உள்ளன.இவரது வளவில் தென்னை மரங்கள் உள்ளன. இவை பருவ காலத்தில் பலன் கொடுத்தன.
இவற்றில் சுமார் 50 தேங்காய்களை இவர் விதைப்புக்காக தயார் செய்து இருந்தார்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் இத்தேங்காய்களை பார்வையிட்டார். அப்போதே ஓர் அதிசயத்தை கண்டார். இவற்றில் ஏனைய தேங்காய்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானதாக ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னைகள் முளைத்து இருந்தன.இந்த அதிசயத்தை கேள்வியுற்ற அயலவர்கள் பலரும் இவரின் வீட்டுக்கு சென்று தேங்காயை பார்வையிட்டு இருக்கின்றார்கள்.
இன்று அனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா. இந்த அதிசய தேங்காயை ஆலய நிர்வாகத்திடம் கையளிக்க செந்தூரன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக