புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தந்தையிடம் அடிவாங்கியதால் மனமுடைந்துபோன 27 வயது மகன் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று நிவிதிகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.தந்தை – மகன் ஆகியோரிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்டு சென்றதில், தந்தை மகனை அடித்துள்ளார். இதனால்
மனமுடைந்துபோன மகன் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென நிவிதிகல காவல்துறையினர் தெரிவித்தனர்.

தந்தை தாக்கியதை அடுத்து வீட்டின் பின்புறமாக சென்று அழுதுகொண்டிருந்ததாகக் கூறப்படும் இந்த இளைஞன், மனைவியை அழைத்து, குழந்தையை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதன்பின்னரே இந்த இளைஞன் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுருக்கிட்ட போது அயலவர்கள் உடனடியாக செயல்பட்டு கயிற்றை வெட்டி, இளைஞனை நிவிதிகல வைத்தியசாலையில் அனுமதிக்க எடுத்துச் சென்ற போதிலும், இளைஞன் உயிர் பிரிந்துவிடடார்.

இதன்பின்னர் உயிரிழந்த இளைஞனின் தந்தை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top