யாழ். போதனா வைத்தியசாலையில் 13 வயதான சிறுமியொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாகவும் இக்குழந்தை இறந்த நிலையில் அக்குழந்தையின் தாயான சிறுமி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.இவ்வாறு தாயாகிய இச்சிறுமி
தலைமறைவாகியதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
13 வயதுச் சிறுமி கடந்த மாதம் 2ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை இறந்து பிறந்துள்ளதால் அச்சிறுமி குழந்தையைவிட்டு, கடந்த மாதம் 26ஆம் திகதி உறவினர் ஒருவருடன் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறுமி தொடர்பான விபரங்கள் தெரியாதுள்ள நிலையில், இறந்த சிசு தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்ததாவது,
13 வயது சிறுமி குழந்தை பிரசவித்திருப்பது என்பது பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்பட வேண்டும்.சிறுமி பிரசவித்த குழந்தை தொடர்பாகவும் பொலிஸாரோ வைத்தியர்களோ சட்ட வைத்திய அதிகாரிக்கு தகவல் தெரியப்படுத்தப்படாத நிலையில் பரிசோதனை மேற்கொள்வது கடினமான விடயமாக இருக்கின்றது.
இவ்வாறு குழந்தை பிரசவித்த சிறுமியின் விபரங்கள் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் எவ்வாறு மரபணு பரிசோதனை மேற்கொண்டு சிறுமியின் தாய்மைக்கு பொறுப்பானவரை தண்டிக்க முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது' என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக