தனது மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரைக் கைதுசெய்ய அதுருகிரிய காவல்துறையினர் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.ஹினிதும பிரதேசத்தில் வசித்துவரும் இந்தச் சிறுமியை, மாலபே பிட்டுகல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வேன் ஒன்றில்
வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தபோது அத்துருகிரிய காவல்துறையினர், வேனை முற்றுகையிட்டு சாரதியைக் கைதுசெய்துள்ளனர். அத்துடன், சிறுமியையும் கைதுசெய்துள்ளனர்.
காவல்துறையினர் முற்றுகையிட்ட சந்தர்ப்பத்தில் இதனை வழிநடத்திவந்த சிறுமியின் மச்சான் (சிறுமியின் அக்காவை மணம் செய்தவர்) அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, பிலியந்தயில் வசித்துவரும் தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு தினமும் வருகைதரும் சந்தேக நபர், தனது சகோதரி அறிந்திருக்க மச்சானின் ஆலோசனைக்கமைய தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முயற்சி மேற்கொண்டனர். எனினும், சிறுமியின் தாய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், நீதிமன்ற உத்தரவைப் பெற்று சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.
இந்த சிறுமி சிறிது காலத்திற்கு முன்னர் ஹினிதும பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இதுகுறித்து தனியான விசாரணைகளை அத்துருகிரிய காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக