நடிகர் எம்ஆர்கே இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது (72).
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 500-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்தவர் எம்ஆர்கே.அவரது இயற்பெயர் எம்ஆர்
கிருஷ்ணமூர்த்தி. இவர் நடித்த வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ரஜினியின் தர்மத்தின் தலைவன், அருணாச்சலம் போன்ற படங்கள் புகழ்பெற்றவை.
கமலுடன் மகராசன் படத்தில் நடித்துள்ளார். விக்ரமுடன் சாமி, தில் படங்களிலும் நடித்துள்ளார்.
ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். வி கோபாலகிருஷ்ணன், செந்தாமரை ஆகியோரின் நாடகக் குழுக்களில் முக்கியப் பங்காற்றியவர் எம்ஆர்கே.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்ஆர்கே, இன்று பிற்பகல் மரணமடைந்தார்.
அவரது மனைவி கடந்த 2008ஆம் ஆண்டு இறந்து விட்டார். மகன்- மகள், பேரன் பேத்திகள் உள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி பேயாழ்வார் தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக