யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் பெண்ணொருவருக்கு தவறாக சிகிச்சை அளித்த வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் கணவனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால், பெண்ணின்
கணவனும் அனலைதீவுப் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைச் சிற்றூழியர் ஒருவரும் இணைந்து சிகிச்சை குறித்த பெண்ணுக்கு அளித்துள்ளனர்.
எனினும், இருவரும் சேர்ந்து பிழையான சிகிச்சை அளித்ததன் காரணமாக குறித்த பெண் உபாதைக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, குறித்த பெண்ணின் கணவனையும் சிகிச்சை அளித்த சிற்றூழியரையும் அனலைதீவு பொலிஸார் கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்நிலையில், இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக