புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வேட்டவலம் அடுத்த பன்னியூர் இசுகழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (பெயர் மாற்றபட்டுள்ளது) இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த வினோத் நட்பாக பழகி வந்தார்.


இந்த நிலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மாணவி பிரியா திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த வினோத் மாணவியை ஆடுதொட்டி தெருவில் தனது அத்தை வீட்டுக்கு சென்று வரலாம் என்று கூறி வினோத் அழைத்து சென்றார்.

அங்கு பிரியாக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்து அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது வினோத் தனது செல்போனில் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா தனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.

செல்போனில் இருந்த ஆபாச படத்தை வினோத் தனது லேப்-டாப்பில் ஏற்றி நண்பர்களுக்கு காட்டி உள்ளார். இதை அறிந்த மாணவியின் சகோதரர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் மாணவியிடம் கூறினார். உடனே பிரியா வினோத்திடம் ஆபாச படம் ஏன் எடுத்தாய் என்று சண்டை போட்டார். அப்போது வினோத்தும் அவரது நண்பர் செந்தில் குமாரும் தெரியாமல் தவறு செய்துவிட்டோம் படத்தை அழித்துவிடுகிறோம் என்று கூறினர்.

இதையடுத்து அவர்களை மாணவி கண்டித்துவிட்டு சென்றார். ஆனால் மாணவியின் ஆபாச படம் பலரது செல்போனில் பரவி உள்ளது. அந்த படத்தை வினோத் நண்பர்கள் செல்போன்களுக்கு பரப்பி உள்ளார். இதேபோல் பல செல்போன்களுக்கும் ஆபாச படம் பரவியது.

இதையறிந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவண்ணா மலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து வினோத், செந்தில்குமார் மற்றும் சிலரை தேடி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் செங்கத்தில் மாணவி குளிப்பதை ஆபாச படம் எடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யபட்டனர். என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top