புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை எரித்து கொல்ல முயன்ற காதலனையும், அவருடைய தாயாரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.ஹாசன் மாவட்டம் அரிசிகெரெ தாலுகாவில் பானாவரா போலீஸ் எல்லைக்குட்பட்ட கரடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிம்மப்பா.
இவருடைய மகள் கீதா (வயது 22). அதே பகுதியை சேர்ந்த பயிரப்பா-லிங்கம்மா தம்பதியரின் மகன் ராஜு (25).

அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ராஜுவும், கீதாவும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. சுமார் 6 ஆண்டுகளாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதற்கிடையே திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜுவை கீதா அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.

ஆனால் ராஜுவோ ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் ராஜு விட்டுக்கு கீதா சென்றார். அப்போது இன்றே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கீதா வற்புறுத்தினார். அதற்கு ராஜு மறுப்பு தெரிவித்தார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜுவும், அவருடைய தாயார் லிங்கம்மாவும் கீதா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் உடலில் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் கீதா அலறினார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து கீதாவை பானாவரா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ராஜுவும், லிங்கம்மாவும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பானாவரா போலீ சில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான தாய்-மகனை தேடி வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top